Skip to main content

"நாங்கள் ஆட்சிக்கு வந்தால்.. வீட்டுக்கு ஒருவருக்கு வேலை!" - அ.ம.மு.க. தேர்தல் அறிக்கை! 

Published on 12/03/2021 | Edited on 13/03/2021

 

 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அ.ம.மு.க.வின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று (12/03/2021) இரவு நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், கூட்டணிக் கட்சியான ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைஸி மற்றும் கூட்டணிக் கட்சியின் தலைவர்கள், அ.ம.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 

அப்போது தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021-க்கான தேர்தல் அறிக்கையில் அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டார். அதில், 'வீட்டில் ஒருவருக்கு வேலை வழங்கும் அம்மா பொருளாதாரப் புரட்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். கிராமப்புற மக்களுக்கு உள்ளூரிலேயே வேலை வாய்ப்பை அளிக்க இந்த திட்டம் செயல்படுத்தப்படும். அனைத்துச் சமூகங்களும் சம உரிமை, சமநீதியைப் பெறும் வகையில் உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்படும். விவசாயிகளுக்கு வீடு தேடி உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் மானியத்துடன் வழங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தொழிற்பேட்டை மற்றும் அதையொட்டிய நகரியம் அமைக்கப்படும். நம்மாழ்வார் பெயரில் டெல்டாவில் இயற்கை வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஏற்படுத்தப்படும்' என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளது. 

 

பொதுக்கூட்டத்தில் பேசிய டிடிவி.தினகரன், "மக்கள் நினைத்தால் நாங்கள்தான் முதல் அணி என்ற நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க.வை மீட்டெடுக்க உருவானது அ.ம.மு.க.; இதை பி டீம் என்று கூறுகிறார்கள். தேர்தல் முடிந்தவுடன் உண்மையான தொண்டர்கள் நம்முடன் வருவார்கள்" என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்