காங்கிரசுக்கு குறைவான சீட்டுகளே ஒதுக்கப்படும் என திமுக தரப்பில் சொல்லப்பட்டதை இப்போதும் ஜீரணிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள் கதர்சட்டையினர்! இறுதியாக காங்கிரசுக்கு எத்தனை சீட்டுகள்தான் கிடைக்கும்? என்கிற கேள்வியுடன் அறிவாலயத்தை நோக்கியபடி இருக்கிறது காங்கிரஸ்.
இந்த நிலையில், திமுக கொடுக்கும் குறைந்த எண்ணிக்கைக்கு உடன்பட்டு கூட்டணி தொடரும்பட்சத்தில், திமுக - காங்கிரஸ் போட்டியிடும் இடங்களில் அக்கட்சியின் வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டி வேட்பாளர்களாக காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் பலரும் களமிறங்க இப்போதே ஆலோசித்து வருகின்றனர்.
சத்தியமூர்த்தி பவனில் கதர்சட்டை நிர்வாகிகள் 4 பேர் கூடி நின்றாலே, திமுகவுக்கு எதிராக விமர்சிப்பதும், போட்டி வேட்பாளராக களமிறங்க வேண்டும் என்றும் விவாதிப்பதும் அதிகமாக இருக்கிறது. இன்றைக்கு விவாதமாக எதிரொலிப்பது தேர்தல் களத்தில் போட்டி வேட்பாளர்களாக களமிறங்கும் சூழலை உருவாக்கும் என்கிறார்கள் நம்மிடம் பேசிய காங்கிரஸ் மாநில நிர்வாகிகள்.