Published on 10/11/2018 | Edited on 10/11/2018
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் அடிப்படை வசதிகளை தமிழக அரசு செய்து தரவில்லை என்பதை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடைபெறுகிறது.
ஆண்டிப்பட்டியில் அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைப்பெற்று வருகிறது.
மாலை 4 மணி அளவில் அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போராட்டத்தில் கலந்து கொண்டு நிறைவுரை ஆற்றுகிறார்.