ஆளும் தமிழக அரசின் எம்.பி.களில் சீனியராக இருப்பவர் தம்பிதுரை. இவர் பிஜேபிக்கு எதிராக பல்வேறு கருத்துகளை தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டே வந்தார். இதனால் இவரை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தடுமாறிக்கொண்டுயிருந்தனர் எடப்பாடியும், பன்னீர் செல்வமும். இந்த நிலையில் சுகாதரதுறை அமைச்சர் இருக்கும் சட்டமன்ற தொகுதி கரூர் எம்.பி. தொகுதிக்குள் வருவதால், தீடிர் என சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னுடைய அப்பாவை தீடீரென கரூர் எம்.பி. தொகுதிக்கு விருப்பமனு கொடுக்க வைத்து பரபரப்பை உண்டாக்கினார்.
தனக்கு எதிராக தன் அப்பாவை களம் இறக்கிய அமைச்சர் மீது எம்.பி. செம்ம கடுப்பில் இருந்தார். அதனால் தொகுதிகளில் மக்கள் குறைகளை கேட்டு தொடர் சுற்றுபயணம் செய்து வரும் தம்பிதுரை, இந்த முறை விஜயபாஸ்கர் தொகுதியில் அமைச்சர் இல்லாமல் சென்றதால் ஆங்காங்கே மறியல், வாக்குவாதம் என மக்களிடம் வசமாக சிக்கி தவித்தார் எம்.பி.
கரூர் எம்.பி தொகுதியில் மொத்தமாக 6 சட்டப்பேரவை தொகுதிகள் வருகின்றன. கரூர் எம்.பி. தொகுதியின் தற்போதைய எம்.பி.யாக இருப்பவர் தம்பிதுரை. இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் அத்தொகுதியில் எம்.பியாக இருந்து வருகிறார். வரவிருக்கும் மக்களவை தேர்தலிலும் கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட தம்பிதுரையும் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
ஆனால் கடந்த சில மாதங்களாகவே தினமும் கரூர் எம்.பி. தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு தினமும் அந்த அந்த மாவட்ட அதிகாரிகளுன் சென்று மக்களின் குறைகளை கேட்டு வருகிறார்.
இந்நிலையில் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியின் எம்எல்ஏவான விஜயபாஸ்கர் இல்லாமலேயே அவரது தொகுதியில் மக்களவை துணை சபாநாயகர் பொதுமக்களை சந்தித்துள்ளார். விராலிமலை சட்டமன்ற தொகுதியில் உள்ள ராஜாளிபட்டி, நம்பம்பட்டி, தேங்காய்தின்னிபட்டி, கசவனூர், வாரகப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பொதுமக்களிடம் சென்று கோரிக்கை மனுக்களை தம்பிதுரை பெற்றார். அவர் செல்லும் பல கிராமங்களில் குடிநீர் கேட்டு மக்கள் அவரிடம் முறையிட்டனர். தேங்காய் தின்னிபட்டியில் குடிநீர் கேட்டும்,100 நாள் வேலை முறையாக வழங்கவில்லை என குற்றம்சாட்டியும் மக்கள் அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
விராலி மலை. இத்தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரான சி.விஜயபாஸ்கர். இவரது தந்தையான சின்னதம்பி மக்களவை தேர்தலில் கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். ஏற்கெனவே பலமுறை விராலி மலைக்கு, அமைச்சர் விஜயபாஸ்கருடன் சென்று குறைகளை கேட்டுள்ள தம்பிதுரை, தற்போது விஜய பாஸ்கர் தொகுதியில் அவர் இல்லாமலேயே மக்களை சந்தித்து குறைகளை கேட்டுள்ளார். விஜய பாஸ்கரின் தந்தையும் கரூர் மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.