ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்று டெல்லியில் நடைபெற்ற விழாவில், நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 46 ஆசியர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவித்தார். இதில் தமிழகத்தைச் சேர்ந்த இரு ஆசிரியர்களுக்கும் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த தலைமையில் நடந்த இந்த விழாவில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதில் நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 46 ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நல்லாசிரியர் விருதுகளை வழங்கினார்.
இதில் தமிழகத்தின் கரூர் மாவட்டம் க. பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வ கண்ணன், ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் உள்ள டயமென்ட் ஜூப்ளி மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் மன்சூர் அலி ஆகிய இருவருக்கும் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. இதேபோல், புதுச்சேரி பாவேந்தர் பாரதிதாசன் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் எஸ். சசிகுமாரும் நல்லாசிரியர் விருதினை பெற்றார்.