





ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 20- ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் 21-ஆம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்தனர்.
ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை தொடந்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்துவருகிறது. இன்று (26.08.2019) சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், கே.ஜெயக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்துகொண்டு கண்டன் உரையாற்றினர்.