அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னால் தலைவர் சோனியா காந்தி அவர்கள் ஐந்தாவது முறையாக உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் 2004, 2006 , 2009 , 2014 ஆண்டுகள் தொடர்ச்சியாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் சோனியா காந்தி அவர்கள் நேற்று (11/04/2019) தனது வேட்பு மனுவை ரேபரேலி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் வழங்கினார். அந்த வேட்பு மனுவில் தனக்கு சொந்தமாக கார் இல்லை என தெரிவித்துள்ளார்.மேலும் கையிருப்பு தொகை (Cash in Hand) ரூபாய் 60,000 இருப்பதாகவும் , தனது வங்கி கணக்கில் டெபாசிட் தொகை (Deposit Amount) ரூபாய் 16.5 லட்சம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ரூபாய் 24 லட்சம் (Investments in Mutual Funds ) முதலீடு செய்துள்ளதாகவும் , ரூபாய் 59.97 லட்சம் மதிப்புடைய தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் இருப்பதாகவும் , ரூபாய் 7.29 கோடி மதிப்புடைய விவசாய நிலம் 3.28 ஏக்கர் இருப்பதாக தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதே போல் அசையும் (Movable Assets) மற்றும் அசையா சொத்துக்களின் (Immovable Assets) மொத்த மதிப்பு ரூபாய் 11.81 கோடி ஆக உள்ளதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சொத்து மதிப்பு என்பது 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் வேட்பு மனுவில் குறிப்பிட்ட ரூபாய் 9.28 கோடி இருந்த நிலையில் தற்போது 11.81 கோடி ரூபாய் ஆக சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சோனியா காந்தி அவர்களின் சொத்து மதிப்பு ரூபாய் 2.5 கோடியாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து ரேபரேலி மக்களவை தொகுதியில் ஆறாம் கட்டமாக மே மாதம் 6 தேதி தேர்தல் நடைப்பெற உள்ளது.
பி.சந்தோஷ் ,சேலம்.