Skip to main content

தமிழகத்தில் நடந்ததை சொல்லி அதிரடி கேள்வி கேட்ட சித்தராமையா!

Published on 23/07/2019 | Edited on 23/07/2019

கர்நாடக மாநிலத்தில் எப்போது ஆட்சி கலையும் என்ற சூழல் உருவாகியுள்ளது. தற்போது ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சியை சேர்ந்த 16 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்தது கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ஆளும் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில்  16 எம்எல்ஏக்களை சமாதானப்படுத்த மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கர்நாடக சட்டப்பேரவையில் சித்தராமையா பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.
 

congress



அதில் தமிழகத்தில் முதல்வருக்கு எதிராக 18 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடுத்த ஆதரவை விலக்கி கொண்டனர். இவர்களது முடிவை கடிதம் வாயிலாக ஆளுநருக்கு தெரிவித்தனர். அப்போது கொறடா உத்தரவு கூட இல்லாத நிலையில் சபாநாயகர் அவர்களை தகுதி நீக்கம் செய்தார். அப்போது தமிழக சபாநாயகர் உத்தரவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இந்த நிலையில் நீதிமன்றம் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு வர எவ்வாறு விலக்கு கொடுக்க முடியும் என்று கூறியுள்ளார். சித்தராமையாவின் இந்த கேள்வியால் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்