Skip to main content

முக்கிய நிகழ்ச்சியில் தினகரனை ஒதுக்கிய சசிகலா தரப்பு... பின்னணி என்ன?

Published on 02/12/2019 | Edited on 02/12/2019

மன்னார்குடிக் குடும்ப வகையறாவில், தினகரன் குடும்பத்துக்குள்ளே புகைச்சல் என்று தகவல் வெளி வருகிறது.  கடந்த சில நாட்களுக்கு முன்பு திவாகரன் மகன் ஜெய் ஆனந்த்துக்கும், ஜெ.ஜெ. டி.வி.பாஸ்கரன் மகள் ஜெயஸ்ரீக்கும் நடந்த திருமண நிச்சயதார்த்த விழா பற்றி அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. அந்த விழாவின் பின்னணியில் தான் களேபரங்கள் நடந்திருப்பதாக கூறுகின்றனர். பாஸ்கரனின் மகளான ஜெயஸ்ரீயை சின்ன வயதில் இருந்தே வளர்த்தவர் ஜெயலலிதா தான் என்று கூறப்படுகிறது. அதேபோல் சர்ச் பார்க் கான்வெட்டில் அவரே சென்று ஜெயஸ்ரீயை பள்ளியில் சேர்த்து விட்டார் என்றும் கூறுகின்றனர். சசிகலாவுக்கும் இவர் மிக செல்லம் என்றும் கூறுகின்றனர். 
 

ammk



இப்படி கார்டனில் செல்வாக்காக வளர்க்கப்பட்டவர் ஜெயஸ்ரீ என்பதால் தினகரனுக்கு அழைப்பு இல்லாதபோதும் அவர் மைத்துனரான டாக்டர் வெங்கடேஷ், அந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தினகரன் குடும்பத்துக்குள்ளேயே இப்போது புகைச்சல் ஏற்பட்டு வருவதாக கூறுகின்றனர். மேலும் இவர்களது திருமணம் நடைபெறுவதற்குள் சசிகலா விடுதலையாகி வருவார் என்றும் சசிகலா தரப்பு எதிர்பார்த்து வருகிறது. அப்படி இல்லையென்றால் பரோலில் வருவதற்கும் வாய்ப்பு உண்டு என்றும் கூறிவருகின்றனர். மேலும் சசிகலா உறவினர்கள் தினகரனை ஒதுக்கி வைக்க யார் காரணம் என்றும் ஒரு பேச்சு அடிபட்டு வருவதாக கூறுகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்