Skip to main content

‘திமுக என் தாய் வீடு’ - நம்பிய தொண்டர்கள்; டிவிஸ்ட் அடித்த சரவணன்

Published on 04/01/2023 | Edited on 05/01/2023

 

Saravanan left the BJP and joined AIADMK

 

மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளால்  கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

முன்னதாக, மதுரை விமான நிலையத்தில் அவரது உடலுக்கு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அப்படி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பியபோது, பாஜகவினர் அவரது காரை வழிமறித்தனர். மேலும், ஒருவர் அவர் கார் மீது காலணி வீசினார். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. இதற்கு திமுகவினர் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

 

இச்சம்பவத்தைத் தொடர்ந்து பாஜக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அன்றைய பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மருத்துவர் சரவணன், “பி.டி.ஆர் எங்குச் சென்றாலும் பாஜக எதிர்ப்பைப் பதிவு செய்வோம்..” என்று பேசினார். ஆனால், அதன்பிறகு 24 மணிநேரத்திற்குள்ளாகவே அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை நேரில் சந்தித்த சரவணன், இந்த விவகாரம் தொடர்பாக தனது வருத்தத்தைத் தெரிவித்தார்.

 

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "திமுகவில் சேரப் போகிறீர்களா என்று கேட்டால், நிச்சயமாக சேர்ந்தால் தப்பில்லை. திமுக எனது தாய் வீடு தானே என்று சொல்ல வருகிறேன்" என்று தெரிவித்திருந்தார். இதனால் அவர் திமுகவில் சேருவார் என்று அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்த்து வந்த நிலையில், இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அவரது முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். 

 

 

சார்ந்த செய்திகள்