எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது. இதன் நிறைவு நாள் விழா சென்னையில் இன்று நடக்கிறது. தமிழ்நாடு முழுவதும் இருந்து எம்.ஜி.ஆர். ரசிகர்கள், மகளிர் அணியினர், பொதுமக்கள் என 5 இலட்சம் முதல் 7 இலட்சம் வரை கலந்து கொள்வார்கள் என்று ஜெயக்குமார் கூறினார்.
எப்படி 7 இலட்சம் பேரை திரட்ட முடியும். இதற்கு இடையில் கல்லூரி மாணவர்களை கட்டாயப்படுத்தி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு அழைக்கிறார்கள் என்கிற குற்றசாட்டும் வந்தது.
இந்த நிலையில் எப்படி இவர்கள் அணி திரட்டி கொண்டு செல்வார்கள் என்று விசாரித்தில், திருச்சியை பொறுத்த வரையில் அமைச்சர், மா.செ.கள்., எம்.பி.கள். என ஒவ்வொருவருக்கும் தலா ஒரு தொகுதி வீதம் பிரித்து கொடுத்திருக்கிறார்கள்.
அமைச்சர் வெல்லமண்டிக்கு திருச்சி கிழக்கு தொகுதி, மேற்கு தொகுதியும் - திருவரம்பூர் தொகுதியும் மா.செ. எம்.பி.குமாருக்கு, ஸ்ரீரங்கம் தொகுதி அமைச்சர் வளர்மதிக்கு, புறநகர் பகுதியில் உள்ள அனைத்தும் மா.செ. ரத்தினவேல் தலைமையில் என்று பிரித்து கொடுத்திருக்கிறார்கள்.
இதில் ஒரு தொகுதியில் 2 பகுதி செயலாளர்கள் இருப்பர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தாலா 5 ஆம்னி பஸ் வீதம் ஒரு தொகுதிக்கு 10 ஆம்னி பஸ் கொண்டு வர வேண்டும், என்று அறிவிப்பு கொடுத்து அழைத்து வந்திருக்கிறார்கள்.
திருச்சியை பொறுத்தவரையில் 9 தொகுதியில் 90 ஆம்னி பஸ் என்கிற கணக்கில் ஒருவருக்கு 500 ரூபாய் வீதம் சாப்பாடு செலவு எல்லாம் கட்சி பொறுப்பாளர்கள் வாங்கி கொடுப்பார்கள் என்ற உத்தரவாதத்துடன் அழைத்து செல்கிறார்கள்.
சென்னையை குலுங்க வைக்க தான் இப்படி நள்ளிரவுகளில் தமிழகம் முழுவதும் இருந்து ஆம்னி பேருந்துகள் சென்னையை முற்றுகையிட சென்று கொண்டுடிக்கிறன என 5 இலட்சம் சேர்க்கும் ரகசியத்தை விவரித்தார்கள்.