Skip to main content

"இவ்வளவு தெளிவாகப் பேசிப் பார்த்ததில்லை; அவ்வளவு வலி உள்ளது" - முதல்வர் ரங்கசாமி

Published on 01/04/2023 | Edited on 01/04/2023

 

pondicherry cm rangasamy talks about statehood resolution related

 

புதுச்சேரியில் கடந்த 12 ஆண்டுகளாக முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்தாண்டு முழு பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டு பட்ஜெட் தொகையாக ரூ. 11,600 கோடி நிர்ணயித்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு புதுச்சேரி அரசு அனுப்பி ஒப்புதல் பெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 9ஆம் தேதி துணைநிலை ஆளுநர் தமிழிசையின் உரையோடு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. 13 ஆம் தேதி முதலமைச்சர் ரங்கசாமி முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

 

அதனைத் தொடர்ந்து 13 நாட்கள் காலை, மாலை என 17 அமர்வுகளாக இந்த கூட்டத் தொடர் நடைபெற்றது. கூட்டத் தொடரின் கடைசி நாளான நேற்று எதிர்க்கட்சி தலைவர் சிவா, தி.மு.க உறுப்பினர்கள் நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார் மற்றும் சுயேச்சை உறுப்பினர் நேரு ஆகியோர் 'புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்' என்று தனி நபர் தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தின் மீது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பங்கேற்று மாநில அந்தஸ்தின் அவசியம் குறித்து பேசினர். அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, "மாநில அந்தஸ்துக்காக எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் ஒருமனதாக, இவ்வளவு தெளிவாகப் பேசி பார்த்ததில்லை. அவ்வளவு வலி உள்ளது. எனவே இந்த தனி நபர் தீர்மானத்தை அரசு தீர்மானமாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு கொண்டு சென்று மாநில அந்தஸ்து பெறுவோம். மேலும் எம்.எல்.ஏக்கள் அனைவரையும் அழைத்துச் சென்று பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து பேசி இந்த ஆண்டுக்குள் மாநில அந்தஸ்து பெறுவோம்" என்றார்.

 

அதனைத் தொடர்ந்து சபாநாயகர் செல்வம் மாநில அந்தஸ்து கோரும் தீர்மானத்தை அரசு தீர்மானமாக ஏற்றதால் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் கொண்டு வந்த தனிநபர் தீர்மானத்தை திரும்பப் பெறும்படி கேட்டுக் கொண்டார். எம்.எல்.ஏக்கள் ஐந்து பேரும் தனிநபர் தீர்மானத்தை திரும்பப் பெற்றனர். அதனையடுத்து மாநில அந்தஸ்து கோரி மத்திய அரசை வலியுறுத்தும் அரசு தீர்மானம் 14வது முறையாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அனைத்து எம்.எல்.ஏக்களும் எழுந்து நின்று மேசையை தட்டி ஆரவாரம் செய்து தீர்மானத்தை வரவேற்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமருக்கு இந்த அடிப்படை அறிவு கூட இல்லையே?” - சித்தராமையா

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Siddaramaiah says The Prime Minister doesn't even have this basic knowledge?

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்து சர்ச்சையாக பேசியிருந்தார். இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “ முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

காங்கிரஸ், வாக்கு வங்கி அரசியலுக்காக பட்டியலின,பழங்குடியின,பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பறித்து, பிறருக்கு வழங்கும் ஆட்டத்தை ஆடியது. பின்னர், கர்நாடகாவில் ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்ற பா.ஜ.க, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீட்டிலிருந்து காங்கிரஸ் அரசு உருவாக்கிய இஸ்லாமிய இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது. காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. இதற்கு, காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

Siddaramaiah says The Prime Minister doesn't even have this basic knowledge?

பிரதமர் மோடி இந்த சர்ச்சை பேச்சுக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது, “கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களுக்கு வழங்கப்பட்ட ஒதுக்கீட்டை இஸ்லாமியர்களுக்கு மாற்றியதாக பிரதமர் கூறியது அப்பட்டமான பொய். இது அறியாமையிலிருந்து உருவானது. தோல்வி பயத்தில் இருந்து பிறந்த அவரது விரக்தியின் அறிகுறியாகும். நமது நாட்டின் வரலாற்றில் எந்த தலைவரும் பிரதமரின் அலுவலகத்தை இவ்வளவு கீழ் நிலைக்கு இழிவுபடுத்தியதில்லை.

பொறுப்பான பதவியில் இருப்பதால், பிரதமர் நரேந்திர மோடி இந்த பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். அல்லது, தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலின மற்றும் பழங்குடியின இட ஒதுக்கீடுகளை இஸ்லாமியர்களுக்கு வழங்கப் போவதாக காங்கிரஸ் எங்கே கூறியுள்ளது? காங்கிரஸின் கீழ் எந்த மாநில அரசு இது போன்ற ஒரு கொள்கையை அமல்படுத்தியுள்ளது?

சமூக மற்றும் பொருளாதார ஆய்வறிக்கைகளின் அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடுகளில் திருத்தங்கள் செய்ய முடியும். மேலும், பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை மாற்றியமைக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை. இத்தகைய திருத்தங்களுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் தேவை. ஒரு பிரதமருக்கு இந்த அடிப்படை அறிவு கூட இல்லாதது நம் நாட்டிற்கு உண்மையிலேயே சோகமானது” எனக் கூறினார். 

Next Story

“இதை செய்ய சொன்னால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம்” - வாட்ஸ் அப் எச்சரிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 WhatsApp warning May have to leave India

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் உபயோகிக்கும் செயலி தான் வாட்ஸ் அப். இந்த செயலி மூலம், தகவல்களை பரிமாறவும், இணைய சேவை மூலம் எந்தவித கட்டணமுமின்றி வீடியோ கால், ஆடியோ கால் போன்றவற்றை பயன்படுத்தவும் முடியும். மேலும், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் என அனைத்து விதமான பரிமாற்றங்களையும் இந்த செயலி மூலம் அனுப்பக்கூடிய வசதிகள் உண்டு. இந்த செயலியை உபயோகிக்காத மக்கள் மிகவும் சொற்பமாக தான் இருக்க முடியும் என்றுதான் கூற வேண்டும். 

இதற்கிடையில் வாட்ஸ் அப் பயனர்களின் வசதிகளுக்கு ஏற்றவாறு வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த செயலி மூலம் பயனர் ஒருவருக்கு அனுப்பும் செய்திகளை மூன்றாம் நபர்கள் பார்க்க முடியாதவாறு எண்டு டு எண்டு என்கிரிப்ஷன் ( End to End Encryption) முறையை கொண்டு வந்தது. இதனைப் பயன்படுத்தி பயனர்கள், தாங்கள் அனுப்பும் செய்திகளை பாதுகாத்து கொள்ளலாம். இதனால், தனிப்பட்ட ஒருவரின் செய்திகள் பாதுகாக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் மத்திய அரசு புதிய மாற்றத்தை கொண்டு வந்தது. மத்திய அரசு கொண்டு வந்த அந்த சட்டத்தில் கூறியதாவது, போலி செய்திகளையும், நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் தவறான செய்தி பகிர்வுகளை கண்டறிய வேண்டும். இதனால், வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற செய்தி பகிர்வு செயலி வாயிலாக பகிரப்படும் அனைத்து செய்திகளும் சேமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.

இதனை எதிர்த்து வாட்ஸ் அப், பேஸ் புக் ஆகிய நிறுவனங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கு நேற்று (25-04-24) டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ‘வாட்ஸ் அப் எண்டு டு எண்ட் என்கிரிப்ஷன் காரணமாக போலி செய்திகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், இது போலி செய்திகளால் நாட்டில் நிலவும் அமைதி மற்றும் ஒற்றுமையை சீர்குலைத்துவிடும்’ என வாதிட்டார். 

இதனையடுத்து, வாட்ஸ் அப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேஜஸ் காரியா, “இந்த சட்டத்தை அமல்படுத்துவதால் நாங்கள் ஒரு முழுமையான சங்கிலியை வைத்திருக்க வேண்டும். மேலும், மில்லியன் கணக்கான செய்திகளை பல ஆண்டுகளாக சேமிக்க வேண்டும் நிலை உருவாகும். உலகில் எந்த நாட்டிலும் இது போன்ற சட்டங்கள் இல்லை.  இது போன்ற சட்டங்களை கொண்டு வந்து  என்கிரிப்ஷனை எடுக்க சொன்னால் வாட்ஸ்அப் இந்தியாவை விட்டு செல்ல வேண்டி இருக்கும்” எனத் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இது தொடர்பான வழக்கை ஒத்திவைத்தனர்.