சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 7,171 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த கரோனா வைரசால் 1.8 லட்சம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ள இந்த வைரஸ் இதுவரை 147 பேரைப் பாதித்துள்ளது. மேலும், கர்நாடகா, டெல்லி மற்றும் மும்பையில் தலா ஒருவர் என மூன்று பேர் இதுவரை கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,அவற்றின் ஆசிரியர்களும், பிற பணியாளர்களும் பணிக்கு வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நோய் தடுப்புக்கு இது உதவாது.நோய்த்தொற்று ஏற்படுவதை தடுக்க, பொதுத்தேர்வு பணியில் உள்ளவர்கள் தவிர மற்றவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்றும், Test, test, test. Test every suspected case. சோதனை செய், சோதனை செய், சோதனை செய். கொரோனா அறிகுறி உள்ள அனைவரையும் சோதனை செய்யுங்கள் என்பது தான் கொரோனா தடுப்புக்காக உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ள ஆலோசனை ஆகும். அதை மதித்து கொரோனா சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தமிழ்நாடு வருபவர்களுக்கு மட்டும் தான் கொரோனா ஆய்வு நடத்தப்படுகிறது. இந்த சோதனையை உள்ளூரில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் உள்ளவர்களுக்கும் நீட்டிக்க வேண்டும். விமான நிலையம், துறைமுகங்களின் பணியாளர்களுக்கும் கொரோனா ஆய்வு நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,அவற்றின் ஆசிரியர்களும், பிற பணியாளர்களும் பணிக்கு வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நோய் தடுப்புக்கு இது உதவாது.நோய்த்தொற்று ஏற்படுவதை தடுக்க, பொதுத்தேர்வு பணியில் உள்ளவர்கள் தவிர மற்றவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்!
— Dr S RAMADOSS (@drramadoss) March 18, 2020
அதோடு, கூட்டம் கூடுவதால் கொரோனா பரவுவதை தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் சரியானவை. கூடுதலாக, அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடும் அரசு அலுவலகங்கள், வாராந்திர சந்தைகள் ஆகியவற்றுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.