கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரத்தை சேர்ந்த லதா (51). இவர் காட்டுமன்னார்கோவில் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 16ம் தேதி இரவு மகன் பிறந்தநாளையொட்டி கோவிலுக்கு வழிபடச் சென்றபோது, அங்கிருந்த தர்ஷன் என்கிற நடராஜ கோயிலின் தீட்சிதர் அந்த பெண்ணை ஆபாசமாக திட்டி கன்னத்தில் அறைந்தார். இதனைத் தொடர்ந்து சிதம்பரம் காவல்துறையினர் அவர் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள தீட்சிதரை தேடி வருகின்றன.
— Sivasankaran Saravanan (@Sivasankarans86) November 19, 2019
மேலும் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் நிர்வாக அமைப்பின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் பாலகணேசன் சம்மந்தப்பட்ட தீட்சிதர் தர்ஷனை இரண்டு மாதம் கோவிலில் பூஜை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளக் கூடாது என்றும் ரூ 5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மத உணர்வுகளை புண்படுத்தினால் அவரகள் எப்படி எதிர்வினை ஆற்றுவார்களோ அதுபோல இந்துக்களின் மத உணர்வுகள் காயப்படுத்தப்பட்டால் இந்துக்கள் எதிர்வினையாற்றும் வரை திருமாவளவன் போன்ற இந்து விரோதிகள் இந்துக்களை சீண்டிக்கொண்டு தான் இருப்பார்கள். வீதிக்கு வரும் நேரமிது' என கூறியிருந்தார்.
இதற்கு ட்விட்டரில் சிவசங்கரன் சரவணன் என்பவர் எச்.ராஜாவிடம் ட்விட்டர் பக்கத்தில் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். அந்த கேள்வியில், 'ஐயா, நம் இந்து சொந்தம் ஒருவரை சிதம்பரம் தீட்சிதர் ஒருவர் கன்னத்தில் அடித்துவிட்டார். அவரைக் கண்டித்து நீங்கள் போராட்டம் அறிவிக்க வேண்டும்' எனக் கூற அவருக்கு எந்த பதிலும் அளிக்காத ராஜா அவரை பிளாக் செய்துள்ளார். இது சம்மந்தமாக அவர் ஸ்க்ரீன்ஷாட்டைப் பகிர சமூகவலைதளங்களில் அது வைரல் ஆகி வருகிறது.