Skip to main content

கரோனாவைக் கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் கட்டமைப்புகள் இல்லை... பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அதிரடி!  

Published on 12/06/2020 | Edited on 12/06/2020

 

pmk

 


இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை நெருங்கியது. அதேபோல் உலகளவில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் இந்தியா 4- ஆவது இடத்தில் உள்ளது. உலகளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 20 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசிலில் 8 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தடுத்த இடத்தில் உள்ள ரஷ்யாவில் 5 லட்சம் பேரும், இந்தியாவில் 2.97 லட்சம் பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,86,579- லிருந்து 2,97,535 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,102- லிருந்து 8,498 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் 38,716, டெல்லியில் 34,687, குஜராத்தில் 22,032, ராஜஸ்தானில் 11,838, மத்திய பிரதேசத்தில் 10,241, உத்தரப்பிரதேசத்தில் 12,088, ஆந்திராவில் 5,429, தெலங்கானாவில் 4,320, கர்நாடகாவில் 6,245, கேரளாவில் 2,244, புதுச்சேரியில் 157 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 


இந்த நிலையில் பா.ம.கஶ்ரீ நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கரோனா வைரஸ் பரவல் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், சென்னையில் ஒரு நாளைக்கு 20,000 சோதனைகள் செய்யப்பட்டால் கரோனா பரவலை விரைவாகக் கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என்று மருத்துவ வல்லுனர்களாக உள்ள எனது நண்பர்கள் கூறுகின்றனர். ஆனால், அதற்குரிய கட்டமைப்புகள்  தமிழகத்தில் இல்லை என்று கூறப்படுகிறது என்றும், ஒரு நாளைக்கு 10,000 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டால் அடுத்த 15 நாட்களில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும் என்பதும் வல்லுனர்கள் கருத்து. அது சாத்தியம் தான் என்பதால் சென்னையில் இப்போது 6,000 ஆக உள்ள சோதனைகளை 10,000 ஆக அதிகரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.  

 

 

 

சார்ந்த செய்திகள்