நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தமிழகத்தில் ஒரு இடத்தை மற்றும் கைப்பற்றியது. திமுக கூட்டணி தமிழகத்தில் 37 இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட அனைத்து கூட்டணி வேட்பாளர்களும் படுதோல்வி அடைந்தனர். இதில் பாமக, தேமுதிக இரண்டு கட்சிகளும் தங்களது மாநில அந்தஸ்த்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அன்புமணி ராமதாஸ் தருமபுரி தொகுதியில் தோல்வியை தழுவினார்.
இந்த நிலையில் அதிமுகவில் சீனியர்கள் ராஜ்யசபா சீட் கேட்டு அதிமுக தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். அதிமுகவில் உள்ள ராஜ்யசபா எம்.பி இடங்களுக்காக கே.பி.முனுசாமி, தம்பிதுரை, தன் அண்ணனுக்காக அமைச்சர் சண்முகம், அன்வர் ராஜா, தமிழ் மகன் உசேன், கோகுல இந்திரா, ரபி பெர்னார்ட் என்று பலரும் அதிமுகவின் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.இதனால் எடப்பாடி கட்சியினரை எப்படி சமாளிப்பது என்று ஆலோசித்து வருகிறார். இந்த நிலையில் பாமகவுக்கு ராஜ்யசபா சீட் வழங்கினால் அது கட்சிக்குள் மேலும் குழப்பத்தை உருவாக்கும் என்றே எடப்பாடி கருதுகிறாராம். இதனால் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தனக்கு எம்.பி. பதவி கேட்டு பாஜக தலைவர் அமித் ஷா மூலமாக தீவிர முயற்சி செய்து வருகிறாராம்.