திண்டுக்கல் கோவிந்தாபுரம் வாசவி மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்த பிறகு செந்தியாளர்களிடம் பேசிய திமுக துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, "வருமானவரித் துறை மூலம் எதிர்க்கட்சிகளை மிரட்டும் நடவடிக்கையில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. இந்திய தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஜனநாயகப் படுகொலை நடந்தேறியுள்ளது. இது தவறான முன்னுதாரணம். சோதனை என்ற பெயரில் வருமானவரித்துறையினர் எதிர்கட்சி வேட்பாளர்களின் இடங்களில் சோதனை செய்தார்கள். இது மிக மோசமான நிகழ்வு. எதிர்காலத்தில் இது தவிர்க்கப்பட வேண்டும்.

தேனி மாவட்டத்தில் 160கோடி ரூபாய் வரை வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் செயல்படவேண்டிய செக்போஸ்டுகள் அனைத்தும் ஓபிஎஸ் குரூப்புக்காக திறந்து விடப்பட்டுள்ளன. அங்குள்ள காவல் துறையும் வருமான வரித்துறையும் முறையாக செயல்படவில்லை. ஆளும் தரப்பினரின் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் திமுக கூட்டணிக்கு அதிக அளவில் வாக்களிக்கிறார்கள். இந்த முறை மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். ராகுல்காந்தி பிரதமராகவும் ஸ்டாலின் முதல்வராகவும் பதவி ஏற்பார்கள் இது உறுதி என்று கூறினார்
அதுபோல் திமுக பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் வேலுச்சாமி ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஜவ்வாது பட்டியில் ஓட்டு போட்டார். அது போல் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினரும் மேற்கு மாவட்ட செயலாளருமான சக்கரபாணி, கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐபி செந்தில்குமார், அமமுக வேட்பாளர் சோதிமணி, ம.நீ.ம கட்சி வேட்பாளர் சுகாதாகரனும் ஆகியோரும் வாக்களித்தனர்.