Published on 18/04/2019 | Edited on 18/04/2019
தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

இதனைத் தொடர்ந்து அவர், திண்டிவனம் வாக்குச்சாவடியில் நான் வாக்களிக்கச் சென்றபோது வாக்கு எந்திரம் வைக்கப்பட்டிருந்த பகுதியில் போதிய வெளிச்சம் இல்லை. வாக்களிக்க சிரமமாக இருந்தது. இன்னும் பல பகுதிகளில் இதேநிலை காணப்படுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. வாக்குப்பதிவு நிறைவடைய இன்னும் 6 மணி நேரம் உள்ளது. வாக்குச்சாவடிகளில் போதிய வெளிச்சம் கிடைக்க தேர்தல் ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.