Skip to main content

'புறக்கணிக்கப்பட்ட படத்திற்கு தேசிய விருதா? ; அதிர்ச்சியளிக்கிறது' - முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்து

Published on 24/08/2023 | Edited on 24/08/2023

 

 'A national award for a neglected film?; Shocking'- CM Stalin's comment

 

2021 ஆம் ஆண்டிற்கான 69 ஆவது தேசிய  தேசிய விருதுகளை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்தார். இந்த விழாவில் தமிழகத்தை சேர்ந்த திரைப்படங்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கருவறை குறும்படத்திற்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறந்த கல்வி திரைப்படமாக இயக்குநர் பி.லெனினின் 'சிற்பிகளின் சிற்பங்கள்' தேர்ந்தெடுக்கப்பட்டு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கடைசி விவசாயி படத்தில் நடித்த மறைந்த விவசாயி நல்லாண்டிக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ் திரைப்படமாக கடைசி விவசாயி அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தேசிய ஒருமைப்பாட்டிற்கான படமாக 'காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் கடைசி விவசாயி திரைப்படத்திற்கு விருது அளிக்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக முதல்வர் 'காஷ்மீர் ஃபைல்ஸ்'  திரைப்படத்திற்கு விருது அளித்தது அதிர்ச்சியை தந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், '#69thNationalFilmAwards -இல் தமிழில் சிறந்த படமாகத் தேர்வாகியிருக்கும் #கடைசிவிவசாயி படக்குழுவினருக்கு என் பாராட்டுகள்! @VijaySethuOffl #Manikandan #நல்லாண்டி மேலும், #இரவின்நிழல் படத்தில் ‘மாயவா சாயவா’ பாடலுக்காகச் சிறந்த பின்னணிப் பாடகி விருதை வென்றுள்ள @shreyaghosha, #கருவறை ஆவணப்படத்துக்காகச் சிறப்புச் சான்றிதழ் வென்றுள்ள இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சிறந்த கல்வித் திரைப்படத்துக்கான பிரிவில் விருதுக்குத் தேர்வாகியுள்ள #சிற்பிகளின்சிற்பங்கள் படக்குழுவினர் ஆகிய அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

மறுபுறம், சர்ச்சைக்குரிய திரைப்படம் என நடுநிலையான திரைவிமர்சகர்களால் புறக்கணிக்கப்பட்ட திரைப்படத்துக்குத் தேசிய ஒருமைப்பாட்டுக்கான #NargisDutt விருது அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இலக்கியங்கள், திரைப்படங்களுக்கு அளிக்கும் விருதுகளில் அரசியல் சார்புத்தன்மை இல்லாமல் இருப்பதுதான் அந்த விருதுகளைக் காலங்கடந்தும் பெருமைக்குரியவையாக உயர்த்திப் பிடிக்கும். மலிவான அரசியலுக்காகத் தேசிய விருதுகளின் மாண்பு சீர்குலைக்கப்படக் கூடாது' என தெரிவித்துள்ளார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்