
முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் பிறந்தநாளை திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் முழுவதும் உள்ள பெரும்பாலான கட்சி பொருப்பாளர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கோவில்களில் அர்ச்சனை செய்தனர்.
நத்தம் விஸ்வநாதனின் சொந்த ஊரான வேம்பார்பட்டி மாவட்ட பொறுப்பாளர்கள் விஸ்வநாதனுக்கு மாலை, சால்வை அணிவித்து தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். அதுபோல் திண்டுக்கல்லில் நெப்போலியன் மற்றும் முன்னாள் கவுன்சிலர் ஆகியோர் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.
நிலக்கோட்டை தொகுதி அ.தி.மு.க. பெண் எம்.எல்.ஏ. தேன்மொழி சேகர், வத்தலக்குண்டு அருகே இருக்கும் சென்றாயப் பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகளை நடத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

பின்னர் நிலக்கோட்டை வடக்கு, தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பேருந்து நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பிறந்தநாள் நிகழ்ச்சியில் மக்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினார். அதன் பின் அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலிலும் பூஜை நடத்தினார். முன்னாள் கவுன்சிலர் தட்டிமுருகன் வத்தலகுண்டு மாரியம்மன் கோவிலில் அன்னதானம் வழங்கினார். நத்தம், ஆத்தூர், நிலக்கோட்டை, பழனி ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் பிறந்தநாளை அக்கட்சியினர் கொண்டாடினர்.