ஆந்திரமாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி நாடாளுமன்றத்திற்கு நாரதர் வேடத்தில் எம்.பி. ஒருவர் வந்திருந்தார்.
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்ட போது, சிறப்பு அந்தஸ்து கோரிக்கை விடுத்திருந்தார் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு. இதற்கு மத்திய அரசு உறுதியளித்திருந்ததாகவும், தற்போது அதை நிறைவேற்ற மறுப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். அதுமட்டுமின்றி, மத்திய பட்ஜெட் அறிவிப்பின் போது, ஆந்திர மாநிலத்திற்கு போதுமான பட்ஜெட் வழங்கப்படவில்லை என்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டின. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் போராட்டங்களும் நடத்தப்பட்டன. இருந்தபோதிலும் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் திட்டமே கிடையாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.
TDP MP Naramalli Sivaprasad dresses up as 'Narad Muni' to protest over demand for special status for Andhra Pradesh. Sivaprasad had earlier also dressed up as a woman, a cattle herder & a school boy among others #Delhi #BudgetSession pic.twitter.com/dpuektEGSD
— ANI (@ANI) March 28, 2018
இந்நிலையில், கடந்த மார்ச் சில வாரங்களுக்கு முன்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் கட்சி விலகுவதாக அறிவித்த ஆந்திரமாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மத்திய அரசுக்கெதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கும் ஆதரவளிப்பதாக அறிவித்தார்.
இந்நிலையில், தெலுங்குதேசம் கட்சியின் எம்.பி. நரமல்லி சிவபிரசாத் இன்று நாடாளுமன்றத்திற்கு நாரதர் வேடமிட்டு வந்துள்ளார். மேலும், இவர் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார். இதற்கு முன்பாக இவர் நாடாளுமன்றத்திற்கு பெண், மாடு மேய்ப்பவர் மற்றும் பள்ளி மாணவன் போல் வேடமிட்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.