Published on 18/06/2019 | Edited on 18/06/2019
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் பாஜக கூட்டணி தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.இதை பாஜக மட்டும் 303 இடங்களை கைப்பற்றி தனிபெரும்பான்மை பெற்றது.தமிழகத்தில் திமுக கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக சார்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார். இன்று தமிழக்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.பி.க்களும் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.அப்போது தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் அனைவரும் தமிழில் பதவி பிரமாணம் எடுத்து கொண்டனர்.

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பதவி ஏற்கும் போது தமிழ் வாழ்க என்று கூறும் போது பாஜகவினர் எதிர் கோஷங்களை எழுப்பினர். பின்னர் அதிமுக சார்பாக வெற்றி பெற்ற தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் பதவி பிரமாணம் எடுத்து வரும் போது முன்னதாக அமர்ந்திருந்த திமுக எம்பி தயாநிதிமாறன் எதிர்கட்சி என்றும் பாராமல் அவருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். பின்பு ரவீந்திரநாத் குமாரும் பதிலுக்கு கைகுலுக்கி வணக்கம் செலுத்தி மரியாதை நிமித்தமாக பார்த்து சிரித்தார். இது திமுக மற்றும் அதிமுக கட்சியினரிடையே ஆரோக்கியமான செயலாக பார்க்கப்படுகிறது.