Skip to main content

ப்ரைவேட் அருவியில் குளியல் போடும் எம்.ஏ.ஏக்கள்!!!

Published on 24/10/2018 | Edited on 24/10/2018
murugan


 

குற்றாலம் இசக்கி ரிசார்ட்டில் தங்கியுள்ள எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது. இன்று மதியம் 3 மணியளவில் ரிசார்ட்டுக்கு வந்தார் அரூர் எம்.எல்.ஏ. முருகன். இவர் தனது குடும்பசூழல் காரணமாக வர இயலாது என்று தகவல் அனுப்பியிருந்தார். இந்த நிலையில் இன்று வந்தவரிடம் பேசினோம். கடந்த வாரம் நான் அணி மாறி விட்டதாக ஒரு தகவல் பரவியது, அது தவறான தகவல். அதை உறுதிபடுத்தவே நான் இங்கு வந்துள்ளேன். 
 

கடந்த 2011ல் அம்மா அவர்கள் எனக்கு போட்டியிட அனுமதியளித்தார்கள். அப்போது என்னுடைய தொகுதி சி.பி.ஐ. கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது என்போல் இருபது பேர்களின் தொகுதிகள் மாற்றப்பட்டதால் நான் மற்றும் விசாலாட்சி உட்பட அனைவரையும் அம்மா வரச்சொல்லியிருந்தார். கூட்டணி கட்சிக்கு இடம் ஒதுக்கியதால் உங்களுக்கு வாய்ப்பில்லாமல் போனது. அதை நிவர்த்தி செய்வதற்கு நான் எப்படியும் வழி செய்வேன் என்றார்கள். வேட்பாளர் பதவி பறிக்கப்பட்டுவிட்டதே என்று நான் கவலைப்படவில்லை. கட்சிப்பிடிப்போடு உழைத்தேன். அம்மா எனக்கு 2016ல் வாய்ப்பளித்தார்கள். அதேபோன்றுதான் தினகரன் அணியில் நான் பிடிப்போடு செயலாற்றுகிறேன் என்றார்.
 

இதனிடையே ரிசார்ட்டில் தங்கியுள்ள அனைத்து எம்.எல்.ஏக்களும் அங்குள்ள பொது அருவிகளில் குளிப்பதற்காக செல்லவில்லை. தற்போது சீசன் நன்றாக இருந்தும் குளிர் என்பதால் அருவி குளியல் போடப்படவில்லை என்று சொல்லப்பட்டது. ஆனால் தங்க. தமிழ்செல்வன் நேற்றைய தினம் மாலை எம்.எல்.ஏக்களிடம் சிலரிடம் பேசியபோது, நான் எண்ணை தேய்த்து பாடி மசாஜ் செய்து ப்ரைவ்வேட் அருவியில் குளிக்க போகிறேன், போய்விட்டுவந்து ஓய்வு எடுப்பேன் இதுதான் இன்றைக்கு என்னுடைய திட்டம் என்று சொல்லிவிட்டு 12 கி.மீ. தள்ளியுள்ள புலியறை அருகிலுள்ள மலையில் இருக்கும் கண்ணுபுளிமெட்டு அருகிலிருக்கும் தனியார் அருவிக்கு சென்றார். குற்றால அருவிகளில் எண்ணை மசாஜ், ஷாம்ப், சோப்பு குளியலுக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதனால் எண்ணை குளியல் போடுவதற்காக கண்ணுபுளிமெட்டு ப்ரைவேட் அருவிக்கு நடு இரவில் சென்று அருவியில் குளியல் போடுகிறார்கள் எம்.எல்.ஏக்கல் சிலர்.

 

 

சார்ந்த செய்திகள்