சென்னை போயஸ் கார்டனில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த். அப்போது அவரிடம், பாஜகவுக்கு எதிராக பலமான ஒரு கூட்டணி உருவாகிறதே என்ற கேள்விக்கு, ஒருவரை 10 பேர் எதிர்க்கிறார்கள் என்றால் யார் பலசாலி என பதில் கேள்வி எழுப்பினார். பாஜக ஆபத்தான கட்சி என எதிர்க்கட்சிகள் கருதினால், அவர்களுக்கு அது ஆபத்தான கட்சி தானே என்றும், பாஜக ஆபத்தான கட்சியா என்பதை நான் இப்போது கூற முடியாது, அதை மக்கள் முடிவு செய்வார்கள் என்றார்.
இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு கருத்து தெரிவித்த எழுத்தாளர் மதிமாறன்,
ரஜினிகாந்த் ஒருபோதும் பாஜகவுக்கு எதிராக பேசவில்லை. மேலும் பாஜகவை 10 மடங்கு உயர்த்தி பேசியிருக்கிறார். 10 பேரை எதிர்க்கிற ஒருவர் பலசாலியா? 10 பேர் பலசாலியா? என கேள்வி எழுப்புகிறார். வேண்டுமென்றே பத்திரிகையாளர்கள் 10 பேர்தான் பலசாலி என்று சொல்லுகிறார்கள். அது எப்படி ஒருவர்தான் பலசாலி என்று அவரே சொல்லுகிறார். அமெரிக்க அதிபரோட கூட்டணி வைத்தால்கூட எங்க மோடியை வீழ்த்த முடியாது என்கிற தொணி அதில் இருக்கிறது. மோடி கூட காங்கிரசுக்கு வரலாம், ரஜினி காங்கிரஸை ஆதரிக்க மாட்டார். இவ்வாறு கூறினார்.