Published on 15/07/2021 | Edited on 15/07/2021
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் காமராஜரின் 119வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு அரசின் சார்பாக சென்னை அண்ணாசாலை, பல்லவன் இல்லம் அருகில் உள்ள அவருடைய உருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு. ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.