Skip to main content

ஸ்டாலின், வைகோவை குறிப்பிடாமல் ப.சிதம்பரத்தை குறிப்பிட்ட ரஜினி!

Published on 25/07/2019 | Edited on 25/07/2019

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக மாணவர்கள், கல்வியாளர்கள் பலரும் போராடி வந்த நிலையில், நடிகர் சூர்யாவின் எதிர்ப்புக் குரல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கு. பா.ஜ.க. தரப்பு சூர்யா மேல செம கடுப்புல இருக்குது. தமிழிசை தொடங்கி பா.ஜ.க. பிரபலங்கள் பலரும் சூர்யாவைக் கரிச்சிக் கொட்டியிருக்காங்க. அ.தி.மு.க. அமைச்சர்களும் சூர்யாவுக்கு கல்விக் கொள்கை பத்தி என்ன தெரியும்னு அவரைக் கடுமையா விமர்சித்தது மட்டுமில்லாமல், அரசாங்கத்தின் அனுசரணை இனி தனக்கு வேண்டாம்னு சூர்யா முடிவே பண்ணிட்டாரான்னும் மிரட்டல் தொனியில் எச்சரிக்கையும் செய்தாங்கனு கூறப்பட்டது.   
 

rajini



சூர்யா பேசியதற்கு எதிர்ப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும் வைகோ, திருமாவளவன், கமல், சீமான்னு பலரும் சூர்யாவை ஆதரிச்ச நிலையில், சூர்யாவுக்காக ரஜினியும் வாய்ஸ் கொடுத்தது பாஜக தரப்பை சற்று கவனிக்க வைத்துள்ளதாக கூறுகின்றனர்.  கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் "காப்பான்'’திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி கலந்துக்கிட்டார். அந்த விழாவில் பேசிய சிலர், "புதிய கல்விக் கொள்கை பற்றி சூர்யா சொன்ன கருத்தை ரஜினி சொல்லியிருந்தால், அது உடனே பிரதமர் மோடியின் காதுவரை போயிருக்கும்'னு சொன்னாங்க. இதுக்கு பதில் சொன்ன ரஜினி, "புதிய கல்விக் கொள்கை பற்றிய சூர்யாவின் கேள்விகளை வரவேற்கிறேன்'னு வாய்ஸ் கொடுத்ததோடு, "இதுபத்தி சூர்யா பேசியதும் மோடியை எட்டிடிச்சி'ன்னு அழுத்தம் கொடுத்துச் சொன்னார். 


நேரடி அரசியலுக்கு ரஜினி வரணும்னு பா.ஜ.க. எதிர்பார்த்துக்கிட்டு இருக்கும் நேரத்தில் அவர் இப்படி பேசியிருப்பது கூர்மையா கவனிக்கப்படுது. "காப்பான்' பட விழாவில், வைரமுத்துவின் "தமிழாற்றுப்படை' பற்றி சொன்ன ரஜினி, அதன் வெளியீட்டு விழாவில், தமிழினம் இனி எப்படி செயல்படணும்னு ப.சிதம்பரம் தெரிவிச்ச கருத்தையும் மேற்கோள் காட்டினார். திராவிட இயக்கத் தலைவர்களான ஸ்டாலின், வைகோவும் கலந்துக்கிட்ட வைரமுத்து விழாவில் அவங்க இருவரைத் தவிர்த்துவிட்டு, ப.சிதம்பரம் பேசியதை மட்டும் ரஜினி தொட்டதும் அரசியலாக அந்த விஷயத்தை மாற்றிவிட்டனர் என்று கூறுகின்றனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி! 

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
Advani admitted to hospital again

பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு (வயது 96) வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு மற்றும்  சிறுநீரக பாதிப்புகளால்  அவருக்கு வீட்டிலேயே தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு ஓய்வு எடுத்து வருகிறார். இத்தகைய சூழலில் தான் கடந்த ஜூன் 26 ஆம் தேதி இரவு அவரது உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இதனையடுத்து எய்ம்ஸ் மருத்துவர்கள் அளித்த சிகிச்சையால் எல்.கே. அத்வானியில் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் அத்வானி டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இன்று (03.07.2024) இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அப்பல்லோ மருத்துவமனை சார்பில் தெரிவிக்கையில், “பாஜக மூத்த பாஜக தலைவர் லால் கிருஷ்ண அத்வானி இரவு 9 மணியளவில் டாக்டர் வினித் சூரியின் கண்காணிப்பில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். அவர் உடல் நிலை சீராக உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்வானியின் உடல்நிலை குறித்து பாஜக தலைவர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் தொலைப்பேசி வாயிலாகக் கேட்டறிந்து வருகிறார்கள். 

Next Story

நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா!

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
Nellai Mayor Saravanan resigns

கோவை மேயராக பதவி வகித்து வந்த கல்பனா ஆனந்த குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் தனது ராஜினாமா கடிதத்தை தனது உதவியாளர் மூலம் வழங்கினார். மேயர் பதவியில் இருந்து கல்பனா ராஜினாமா செய்தது குறித்து மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவிக்கையில், “உடல் நிலை மற்றும் குடும்பச் சூழ்நிலை போன்ற தனிப்பட்ட காரணங்களுக்காக மேயர் பதவியில் இருந்து கல்பனா ஆனந்த குமார் ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாநகராட்சி ஆணையரிடம் தனது ராஜினாமா கடிதத்தை சரவணன் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கடிதத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக மேயர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Nellai Mayor Saravanan resigns

நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளது. இதில் 16 வது வார்டு கவுன்சிலராக திமுகவைச் சேர்ந்த சரவணன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து நெல்லை மாநகராட்சி மேயராக கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம்  சரவணன் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். அப்போது முதல், மேயர் மற்றும் கவுன்சிலர்கள் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வந்தது. மேலும் இது குறித்து திமுக தலைமைக்கும் நெல்லை மாநகராட்சி கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு மேயருக்கு எதிராகப் புகார் மனு அளித்திருந்தனர். அதே சமயம் மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரக்கோரி கவுன்சிலர்கள் சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்திருந்தனர். இதையடுத்து மேயர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் கோவை, நெல்லை என அடுத்தடுத்து ஒரே நாளில் இரு மேயர்கள் ராஜினாமா செய்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே கோவை, நெல்லை மேயர்கள் மீதான புகார் குறித்து அமைச்சர் கே.என்.நேரு விசாரணை நடத்தி இருந்தார். இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி இரு மேயர்களும் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.