Skip to main content

சசிகலாவிற்கும், ஓபிஎஸ்ஸிற்கும் ஒரே நேரத்தில் செக் வைத்த எடப்பாடி... எடப்பாடியின் அதிரடி அரசியல்!

Published on 26/11/2019 | Edited on 26/11/2019

தற்போது ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமிக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் யாரோட ஆதரவாளர்கள் அதிகமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று போட்டி நிலவி வருவதாக கூறுகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் முடிந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சில முக்கிய முடிவுகளை அதிமுக தலைமை எடுத்துள்ளது. அதில், அதிமுக உட்கட்சி தேர்தலில் போட்டியிட ஐந்து ஆண்டுகள் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கும் ஐந்து ஆண்டுகள் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்தவர்கள் மட்டுமே வர முடியும் என்றும் அதிமுக விதிகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளனர். சசிகலா சிறையில் இருந்து வந்ததும் அதிமுகவில் இணைந்து செயல்படுவார் என்று கேள்வி எழுந்து வந்தது. 
 

admk



மேலும் சசிகலா குறித்து தலைமை தான் முடிவு செய்யும் என அதிமுகவினர் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அதிமுகவில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள சட்ட திருத்தம் சசிகலாவிற்கும் அவரது தரப்பிற்கும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு தற்போது செய்யப்பட்டுள்ள சட்ட திருத்தத்தின் காரணமாக சசிகலா அ.தி.மு.க.வில் சேர்ந்தாலும் அவர் உறுப்பினராக மட்டுமே இருக்க முடியும். கட்சியின் தலைமை பொறுப்புக்கு வர முடியாது என்றும் கூறிவருகின்றனர். அதோடு அதிமுகவில் தனது இடத்தை நிலை நிறுவதுவதற்கும், தன் ஆட்களை முழுக்க முழுக்க கட்சியின் அனைத்து பொறுப்புகளில் நிரப்பி அதன்பின் சட்டமன்றத் தேர்தல், அதிமுக பொது செயலாளர் தேர்தல்களை வெற்றிகரமாக எதிர்கொள்வது தான் எடப்பாடியின் திட்டம் என கூறப்படுகிறது.


மேலும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தங்கமணி பேசும் போது வருகிற சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற்று எடப்பாடி கையில் கொடுப்போம் என்று கூறினார். இவர் பேசிய பிறகு அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் எடப்பாடி தான் என்று அனைவரும் பேச தொடங்கி விட்டனர். இதனால் ஓபிஎஸ்ஸிற்கு அடுத்த முதல்வர் பதவி கிடைப்பதில் சிக்கல் இருக்கும் என்கின்றனர். கட்சியின் நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் எடப்பாடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதால் அதிமுகவில் ஓபிஎஸ்ஸின் செல்வாக்கு குறைந்து விட்டதாக சொல்கின்றனர்.    

 

 

சார்ந்த செய்திகள்