கடந்த 21ஆம் தேதி நடந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் புகழேந்தியும் அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வனும் நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமியும் தமிழரசுக் கட்சி சார்பில் இயக்குனர் கௌதமன் உட்பட 12 பேர் போட்டியிட்டனர். இதில் 84.41% சதவிகித வாக்குகள் பதிவானது.

இந்த வாக்குகள் எண்ணும் பணி விழுப்புரம் பைபாஸ் சாலை அருகே உள்ள எஸ் பொறியியல் கல்லூரியில் வாக்குப்பெட்டிகள் பத்திரமாக கொண்டு வைக்கப்பட்டன. இன்று காலை 8 மணியளவில் வாக்கு எண்ணும் பணி தொடங்கப்பட்டது.

இதில் முதல் சுற்றிலேயே அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் முன்னணியில் இருந்து வருகிறார். இந்த வாக்கு எண்ணும் மையத்தில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மையத்தின் உள்ளே அதிமுக திமுக வேட்பாளர்கள் இருவரும் அருகருகே அமர்ந்து வாக்கு எண்ணுவதை கவனித்து வந்தனர். இதைக்கண்டு அங்கிருந்த அதிகாரிகள் பத்திரிக்கையாளர்கள் ஊடகத்தினர் வியப்புடன் பார்த்தனர் தற்போது வாக்கு எண்ணும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.