Published on 01/05/2019 | Edited on 01/05/2019
கோவை விமானநிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழகம் முழுக்க குடிநீர் பிரச்சனை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமென தேர்தலுக்கு முன்பே அறிவுறுத்தப்பட்டது. குடிநீர் பிரச்சனை இருந்தால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் கொடுத்தால் ஏன் திமுகவினர் கொந்தளிக்கின்றனர். திமுகவிற்கும் தினகரன் கட்சிக்கும் இடையே உள்ள நெருக்கம் வெளிப்பட்டுவிட்டது. சபாநாயகர் மீது எதன் அடிப்படையில் நம்பிக்கையில்லா தீர்மானம் தந்தது என தெரியவில்லை. கட்சிவிரோத செயல்களில் ஈடுபட்டதால்தான் 3 எம்.எல்.ஏ.க்கள் குறித்து சபாநாயகரிடம் புகார் கொடுத்தார் கொறடா. 22 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெறும்.