திருச்சி மாநகர் பகுதியான புத்தூர் பகுதியில் குடியிருக்கும் சிவபதிக்கு பெரம்பலூர் தொகுதி வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி பழைய மாப்பிள்ளை மச்சான் பாசத்தில் சீட்டு கொடுத்தது திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கியமாக முத்திரையர் சமூகத்தை சேர்ந்த பிரமுகர்கள் பலபேர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் சிவபதியின் தேர்தல் பணி பெரிய அளவில் இல்லை என அதிமுக நிர்வாகிகள் இடையே பெரிய புகைச்சல் ஏற்பட்டது.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரம்பலூர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட 3 இடங்களில் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்றாலும் முதல்வரின் வருகை சிவபதி தரப்பினருக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முத்திரையர்கள் சங்க தலைவர் ஆர்.வி.விஸ்வநாதன் அவர் முத்திரையர் மன்னருக்கு மணிமண்டபம் கட்ட நிதி ஒதுக்கிய முதல்வருக்கு நன்றி என்று விளம்பரம் கொடுத்து தன்னுடைய ஆதரவு நிலைபாட்டை காட்டினார். அதே போல தி.மு.க. பக்கம் ஆதரவு கொடுத்திருந்த வீரமுத்திரையர் சங்கத்தை சேர்ந்த செல்வகுமாரை அமைச்சர் விஜயபாஸ்கர் மூலம் பேசி அதிமுக ஆதரவு நிலைபாடை எடுக்க வைத்தனர் அதிமுகவினர்.
இதுவும் சிவபதியின் வெற்றிக்கு போதாது என்று பெரம்பலூர் எம்.பி. தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கு.ப.கிருஷ்ணன், எம்எல்ஏ செல்வராஜ், பூனாட்சி, பரஞ்சோதி உள்ளிட்ட 6 முக்கிய நிர்வாகிகளை நியமனம் செய்து கண்காணிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் சிவபதியை ஜெயிக்க வைத்து விட வேண்டும் என்றும் உங்களுக்கு தேவையான அனைத்தும் கடைசி இரண்டு நாட்களில் தாராளமாக கிடைக்கும் என்றும் அறிவுரை கொடுக்கப்பட்டுள்ளது.