திமுகவின் 15வது அமைப்புத் தேர்தல் நடந்து வருகிறது. அதன்படி, சேலம் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட கன்னங்குறிச்சி, கருப்பூர், காடையாம்பட்டி, ஓமலூர் ஆகிய பேரூர்களில் போட்டியிடுவோருக்கான வேட்புமனு விண்ணப்பம் வெள்ளிக்கிழமை (ஏப். 23) விநியோகிக்கப்பட்டது.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் இந்நிகழ்ச்சி நடந்தது. மத்திய மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ ராஜேந்திரன் முன்னிலையில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச்செயலாளர் சி.ஹெச்.சேகர் வேட்புமனு விண்ணப்ப விநியோகத்தை தொடங்கி வைத்தார்.
நான்கு பேரூர்களில் கட்சி அவைத்தலைவர், செயலாளர், பொருளாளர், துணை செயலாளர்கள், பிரதிநிதிகள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 21 பதவிகளுக்கு கட்சியினர் போட்டிப்போட்டு விண்ணப்பங்களை ஆர்வத்துடன் பெற்றுச் சென்றனர். பூர்த்தி செய்யப்பட்ட வேட்புமனுக்கள், சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட பொருளாளர் ஜி.கே.சுபாஷ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கார்த்திகேயன், ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் ரகுபதி, திருநாவுக்கரசு, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் மருத்துவர் தருண், ஒன்றிய செயலாளர்கள் ரெயின்போ நடராஜன், அறிவழகன், ரமேஷ், கன்னங்குறிச்சி குபேந்திரன், பூபதி, விவசாய அணி இளந்திரையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.