Skip to main content

''டாஸ்மாக்கில் கள்ள வருமானம்... தடுக்க முற்படுமா அரசு...''- ராஜேஸ்வரி பிரியா ஆதங்கம்!

Published on 05/11/2021 | Edited on 05/11/2021

 

 ''counterfeit income in Tasmak ... '' - Rajeswari Priya

 

தீபாவளிக்கு தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளின் மது விற்பனை 431 கோடி எனச் செய்திகள் வெளிவருகின்றன. கடந்த ஆண்டை விட விற்பனை 34 கோடி குறைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இதுகுறித்து அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவனர் மூ.ராஜேஸ்வரி பிரியா  தெரிவித்துள்ளதாவது,

 

'உண்மையை நாம் ஆய்வு செய்ய வேண்டும். கடந்த வாரம் விழுப்புரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஜானகி புரம் என்ற இடத்தில் உள்ள  2 டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில் விலைக்கு அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புதுறை ஆய்வு மேற்கொண்டதில்  4 லட்சத்து 70 ஆயிரத்து 660 ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களும், இன்னொரு கடையில் இரண்டு லட்சத்து 29 ஆயிரத்து 485 ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களும் இருப்பு குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இருப்பு குறைவாக உள்ளது என்பது எவ்வளவு பெரிய ஊழல்.

 

 ''counterfeit income in Tasmak ... '' - Rajeswari Priya

 

இரண்டு கடைகளில் 7லட்சம் ரூபாய் மது பாட்டில்களின் இருப்பு குறைவாக இருக்குமேயானால் 5300 கடைகளில் எத்தனை கோடான கோடி மதிப்பிலான மது பாட்டில்கள் இருப்பு குறைவாக இருக்கும் .எனவே இந்த விற்பனை என்பது பாதி அளவுக்கு மேல் கள்ளத்தனமாக நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை தீபாவளி விற்பனை வரும் வரையில்.

 

அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் சார்பாக நான் போட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் கணினி முறையில் ரசீது வழங்கப்படவேண்டும், விலைப்பட்டியல் வெளியில் வைக்கவேண்டும் என்றும் ,அனைத்து கணக்குகளையும் கணினியில் சேமித்து வைக்கவேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது .இந்த தீர்ப்பினை மதிக்காமல் எல்லா கடைகளிலும் மதுபாட்டில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் பணம் வசூலிக்கப்படுகிறது.

 

கள்ள வருமானம் அதிகமாக இருக்கும் துறையாக டாஸ்மாக் இயங்கி வருகிறது.அரசுக்கு வருமானம் வருகிறது என்பதை‌ விட ஆளுங்கட்சியில் உள்ள அரசியல்வாதிகளின் வருமானமும் அதிகாரிகளின் வருமானமும் உயர்ந்து வருகிறது. மதுவினால் பல உயிரிழப்புகளும்,பல குடும்பங்கள் நிம்மதியையும் இழந்து வருகின்றன.

 

மது விலக்கை படிப்படியாக அமல்படுத்த முதலில் கள்ள வருமானத்தை தடுக்க அரசு முற்பட வேண்டும்'என தெரிவித்துள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

குடிப்பழக்கத்தை தட்டிக்கேட்ட பாட்டியை கொன்ற பேரன்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Grandson attack grandmother for drunkenness

குடிப்பழக்கத்தை கண்டித்த பாட்டியை பேரனே கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ளது சாரூர். இந்த பகுதியில் வசித்து வந்தவர் தாசம்மாள் (80). இவருடைய மகன் புஷ்பராஜ் என்பவருக்கு அஜித் மகன் இருக்கிறார். அவருக்கு வயது 23.

குடும்ப பிரச்சனை காரணமாக புஷ்பராஜின் மனைவியை பிரிந்து சென்று விட்டார். இதனால் புஷ்பராஜூம் அவருடைய மகன் அஜித்தும் தாசம்மாளுடன் வசித்து வந்தனர். அண்மையில் உடல்நிலை சரியில்லாமல் புஷ்பரஜ் இறந்து விட்டார் .

அதன் பிறகு பாட்டியுடன் அஜித் மட்டும் வசித்து வந்தார். அந்த பகுதியில் பெயிண்டிங் வேலைகளுக்கு சென்று வந்த அஜித் குடிப்பழக்கத்திற்கு நாளடைவில் அடிமையாகி விட்டார். இந்நிலையில் பாட்டி  தாசம்மாள் பெயரில் உள்ள 15 சென்ட் நிலத்தை தன்னுடைய பெயருக்கு எழுதி வைக்கும்படி அஜித் மது அருந்திவிட்டு ரகளை செய்து வந்துள்ளார்.

வழக்கம்போல் நேற்று இரவு 11 மணிக்கு மது குடித்துவிட்டு வந்த அஜித் பாட்டி தாசதாசம்மாளிடம் இது தொடர்பாக சண்டை போட்டுள்ளார். அப்பொழுது பாட்டி தட்டி கேட்டுள்ளார். மதுபோதையில் இருந்த அஜித் தாசம்மாளை கீழே தள்ள, சுவரில் தலை மோதி சம்பவ இடத்திலேயே தாசம்மாள் உயிரிழந்தார். தான் தாக்கியதால் பாட்டி இறந்ததை அறிந்துகொண்ட அஜித் பயத்தில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.