Skip to main content

திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் மரியாதை

Published on 16/01/2023 | Edited on 16/01/2023

 

CM respects Thiruvalluvar statue

 

திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

இதனையடுத்து திருவள்ளுவர் விருது மற்றும் தமிழக அரசின் விருதுகளையும் முதல்வர் வழங்கினார். இதன்பின் வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தில் தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.20 கோடி நிதியுதவியும் வழங்கினார்.

 

தொடர்ந்து திராவிடர் கழக துணைத் தலைவர் பூங்குன்றனுக்கு தந்தை பெரியார் விருது வழங்கப்பட்டது. மகாகவி பாரதியார் விருது முனைவர் ஆ.ரா. வெங்கடாசலபதிக்கு வழங்கப்பட்டது.  திராவிட  இயக்க எழுத்தாளர் வாலாஜா வல்லவனுக்கு - பாவேந்தர் பாரதிதாசன் விருதும்,  கி.ஆ.பெ. விசுவநாதம் விருது கவிஞர் மு.மேத்தாவுக்கும், திரு.வி.க விருது நாமக்கல் பொ. வேல்சாமிக்கும் வழங்கப்பட்டது.   

 

எஸ்.வி. ராஜதுரைக்கு அம்பேத்கர் விருதும், முனைவர் மதிவாணனுக்கு தேவநேயப்பாவணர் விருதும்,  பெருந்தலைவர் காமராஜர் விருதை ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதேபோல் 2022 ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது முன்னாள் அமைச்சர் தஞ்சை எஸ்.என்.எம். உபயதுல்லாவுக்கு வழங்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்