Skip to main content

முதல்வர் வேட்பாளரை அறிவித்தால்தான்... -தனியரசு

Published on 19/09/2020 | Edited on 19/09/2020

 

U.Thaniyarasu

 

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் உயர்மட்ட குழுக் கூட்டம் 18.09.2020 மாலை நடைபெற்றது. இதில் அ.தி.மு.க முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று சிலர் வலியுறுத்தியதாகவும், அதனை இப்போது அறிவிக்க வேண்டாம் என்று சிலர் பேசியதாகவும் செய்திகள் வெளியானது. மேலும் 2021 சட்டமன்றத் தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 

அ.தி.மு.க கூட்டணியில் உள்ள தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவரும், காங்கேயம் எம்.எல்.ஏ.வுமான தனியரசு நம்மிடம் பேசும்போது, 

 

அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அ.தி.மு.க தொண்டர்களிடமும், பொதுமக்களிடமும் இருக்கிறது. தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க அதனை அறிவிக்கும் என்று நம்புகிறேன். கூட்டணிக்கு தலைமையேற்கிற அ.தி.மு.க., ஒரு தலைமையின் கீழ் இயங்கி முதல்வர் வேட்பாளரை அறிவித்தால்தான், அந்த அணிக்கு வெற்றி சாத்தியமாகும். கூட்டணிக் கட்சிகளும் தைரியமாகக் களத்தைச் சந்திக்கும். அ.தி.மு.க என்று இல்லை. எந்தக் கட்சியாக இருந்தாலும் அப்படித்தான்.

 

Ad

 

என்னைப் பொறுத்தவரை, அ.தி.மு.க. டிசம்பர், ஜனவரி காலக்கட்டத்தில்தான் முதல்வர் வேட்பாளர் பற்றிய முடிவுக்கு வரும். முன்கூட்டியே இதுபோன்ற முடிவுகளை அ.தி.மு.க.வில் எதிர்பார்க்க முடியாது. அதுவரை கட்சியைக் கட்டுக்குள் வைப்பது, கட்சியைப் பலப்படுத்தும் பணிகளில் அ.தி.மு.க ஈடுபடும் என்றார். 

 


 

சார்ந்த செய்திகள்