Skip to main content

எம்.எல்.ஏ.க்களிடம் ரூ.100 கோடி பேரம் பேசுகிறது பா.ஜ.க.! - குமாரசாமி குற்றச்சாட்டு

Published on 16/05/2018 | Edited on 17/05/2018

எங்கள் எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசி வளைத்துப்போட பா.ஜ.க. முயற்சி செய்துவருவதாக ம.ஜ.த. தலைவர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

 

kumarasamy

 

 

கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி இருந்தாலும், யார் ஆட்சியமைப்பார்கள் என்ற முடிவு இன்னமும் இழுபறியாகவே இருக்கிறது. 104 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க. ஆட்சியமைக்க ஆளுநரைக் கோரும் வேளையில், காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த. கூட்டணி 117 எம்.எல்.ஏ.க்களுடன் ஆட்சியமைக்க தயாராக இருக்கிறது. அதேசமயம், இருதரப்பினரும் தங்களது எம்.எல்.ஏ.க்களை விலைபோகாமல் பார்த்துக்கொள்ளவும் தீராத முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த குமாரசாமி, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பா.ஜ.க. மீது சுமத்தினார். தங்களது எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.100 கோடி தருவதாகவும், அமைச்சர் பதவி தருவதாகவும் கூறி பா.ஜ.க. பேரம் பேசுவதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும், குதிரை பேரம் நடப்பதை குடியரசுத்தலைவரும், ஆளுநரும் அனுமதிக்கூடாது என அவர் வேண்டுகோள் விடுத்துக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், எங்கள் கட்சியின் எம்.எல்.ஏ.க்களின் மீது எங்களுக்கு அதீத நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் கட்சிக்கு விசுவாசமாக நடக்கக்கூடியவர்கள். ஒருவேளை பா.ஜ.க. ஒரு எம்.எல்.ஏ.வை அழைத்தால், நாங்கள் இரண்டு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை எங்கள் பக்கம் இழுப்போம்’ என தெரிவித்துள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்