திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த அரியத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணன். இவர் டூ வீலர் ஓட்டும் போது சீட் பெல்ட் அணியாமல் சென்றார் என்று 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. இதனை பார்த்த சரவணன் இரு சக்கர வாகனம் வைத்திருக்கும் தனக்கு ஏன் சீட் பெல்ட் வேண்டும் என குழம்பியுள்ளார். பின்னர் அந்த மெசேஜை ஆய்வு செய்ததில், அவரது வாகன எண்ணில் செந்தில்குமார் என்ற நபர் சீட் பெல்ட் அணியாமல் சென்றதால் சென்னை மடிப்பாக்கம் போலீஸ் அபராதம் விதித்ததாக கூறப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள சரவணன், தனது வாகன எண்ணில் மற்றொரு நான்கு சக்கர வாகனம் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகிறதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நிலையில் நடிகரும் அரசியல்வாதியுமான பாஜகவின் எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், திருவண்ணாமலையில் சீட்பெல்ட் போடாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியதாக ரூ.100 அபராதம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "சரியா பாருங்க. பேண்ட் பெல்ட் போடாம ஓட்டியிருப்பாரு" என்று கருத்து கூறியுள்ளார். இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.