சமீபத்தில் பாஜகவின் தமிழக தலைவர் நியமனம் குறித்து 'திராவிட இயக்கத் தமிழர் பேரவை'யின் தலைவர் சுப வீரபாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். அதில். "நம்மவர்கள் கோயில் அர்ச்சகர்களாகக் கூட ஆகி விட்டனர். ஆனால் பாஜகவில், ஹெச்.ராஜா, எஸ்வி சேகர் உள்ளிட்ட பார்ப்பனர்கள் எவரும் மாநிலத் தலைவர்களாகக் கூட ஆக முடியவில்லையே, ஏன்? ஏனெனில் இது பெரியார் மண் " என்று குறிப்பிட்டு இருந்தார். இதனையடுத்து சுப வீரபாண்டியனின் இந்த கருத்துக்கு நடிகரும், அரசியல்வாதியுமான பாஜகவின் எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் கூறியுள்ளார். அதில், " ஆனா உங்க வாய்தான் காதுவரை கிழியுது. செயல்ல ஒரு தலித்தைகூட தலைவராக்ககூடிய நல்ல புத்தியில்லா சாதி வெறி பிடித்து அலையும் நீங்கள் பாஜக வைப்பற்றி பேச அருகதை இல்லாத ஓசி பிரியாணிகள் " என்று சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சியில் சுப.வீரபாண்டியன் பேசும் போது தமிழருவி மணியன் தனக்கும் முதலமைச்சர் பதவியின் மீது ஆசையில்லை என்று சொல்லிவிட்டார். இனி என்ன செய்வதென்று புரியாமல், தமிழகம் கண்ணீரில் தத்தளிக்கிறது! என்று ரஜினிகாந்த் பேசியது குறித்து பேசினார். பின்பு சுப.வீரபாண்டியன் பேசியது குறித்து பாஜகவின் எஸ்.வி.சேகர் மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ளார். அதில், "கண்னீரில் தத்தளித்தாலும் உங்க தலைவர் பேரை சொல்ல மாட்டேனுட்டாங்களா?.அடுத்தவங்களை கலாய்கிறேனுட்டு சொந்த கட்சிய தலைவரை கலாச்சுக்கிற ஓசி பிரியாணி மூளை. சூப்பரப்பு" என்று சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் திமுக மற்றும் திகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.