சசிகலா ரிலீஸ் ஆனதும் அ.தி.மு.க. அரசியல் வேகம் எடுக்கும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசி வருகின்றனர். சசிகலாவோட தண்டனைக் காலம் விரைவில் முடிய இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர் கட்ட வேண்டிய அபராதத் தொகை 10 கோடி ரூபாயை கட்டாவிட்டால், மேலும் 6 மாத காலம் அவர் சிறையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்படக்கூடும் என்கின்றனர்.
இந்நிலையில் நேற்று பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி சசிகலா குறித்து கருத்து கூறியுள்ளார். அதில், சசிகலா விடுதலையானால் அரசியலில் பெரிய மாற்றம் வரும் என்றும், சசிகலாவை விடுத்து அரசியல் செய்வது கஷ்டம் என தெரிவித்துள்ளார்.மேலும், சிஏஏ சட்ட திருத்தத்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை.யாருடைய குடியுரிமையும் பறிக்கப்போவதில்லை. இந்த ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்தலாம் ஆனால் அச்சம் ஏற்படுத்தி போராட்டம் நடத்தக்கூடாது என்றும் பேசியுள்ளார்.தொடர்ந்து பேசிய அவர், சசிகலா விடுதலையானால் அரசியலில் மாற்றம் வரும் என்றும், நம் நாட்டில் பொருளாதார சூழ்நிலை மோசமாக உள்ளது. அதனை சரி செய்யவேண்டும் என்றும் பேசினார். பாஜகவின் சுப்பிரமணிய சுவாமி பேச்சால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.