Skip to main content

பாஜகவிற்கு செக் வைக்கும் அதிமுக... அதிமுகவிற்கு எதிராக கைகோர்க்கும் பாஜக, பாமக!

Published on 07/12/2019 | Edited on 07/12/2019

சீட் ஷேரிங் தொடங்கும் முன்பாகவே அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் உரசல் போக்கு அதிகரித்து வருவதாக கூறுகின்றனர். பா.ஜ.க.வுக்கு செல்வாக்குள்ள குமரி மாவட்டத்திலும் தென் மாவட்டங்களிலும் அதற்கு அதிக சீட்டைத் தராமல் செக் வைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. தலைமை நினைப்பதாக கூறுகின்றனர். அதேபோல் உள்ளாட்சி சீட்டுகளில் 80 சதவிகித சீட் வரை தங்களுக்கு ஒதுக்கிக் கொண்டு, மீதம் இருக்கும் சீட்டுக்களை  பா.ஜ.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்குப் பிரித்து கொடுத்து விட வேண்டும் என்று அ.தி.மு.க. கணக்குப் போட்டு வைத்துள்ளதாக கூறுகின்றனர். 
 

admk



அதுபோலவே, வட மாவட்டத்தில் பா.ம.க.வுக்கும் தே.மு.தி.க.வுக்கும், அதிக சீட்டைக் கொடுத்து, சட்டமன்றத் தேர்தலுக்கு முன் அவர்களை பலமானவர்களாக ஆக்கிவிடக் கூடாது என்றும் கவனமாக இருப்பதாக சொல்கின்றனர். இதை எல்லாம் கவனித்த பா.ஜ.க.வும் பா.ம.க.வும் இப்போது இருந்தே அ.தி.மு.க.வுக்கு எதிராகக் கைக்கோர்த்து கொண்டு புதிய வியூகங்களை வகுக்க ஆரம்பித்துள்ளதாக சொல்கின்றனர்.  


 

 

சார்ந்த செய்திகள்