கர்நாடகாவில் 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு மே 10, 2023 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மும்முனை போட்டியில் இருந்தன. இந்நிலையில், 11ம் தேதி (இன்று) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி, காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக 136 இடங்களிலும், பாஜக 65 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் 113 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி ஆட்சி அமைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 136 இடங்களை பெற்றுள்ள காங்கிரஸ் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது.
கர்நாடகாவில் பாஜக தோல்வி அடைந்ததை அடுத்து பாஜக முதலமைச்சரான பசவராஜ் பொம்மை, அம்மாநில ஆளுநர் தவார் சந்த் கெலாட் ஏடை நேரில் சந்தித்து அவரிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அதனை ஆளுநர் தவார் சந்த் கெலாட் ஏற்றுக்கொண்டார்.