




Published on 20/03/2021 | Edited on 20/03/2021
2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு குறைந்த நாட்களே இருக்கின்ற நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் சைதாப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியை ஆதரித்து தொகுதிக்குட்பட்ட ஈக்காட்டுதாங்கல் பகுதியில், பாமக இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் இன்று பிரச்சாரம் செய்தார்.