Skip to main content

நான் 104 நீங்க 106 பழி தீர்த்த அமித்ஷா... கோபத்தில் சோனியா போட்ட உத்தரவு... களத்தில் இறங்கிய சிதம்பரம்!

Published on 07/12/2019 | Edited on 07/12/2019

திகார் சிறையிலிருந்து ப.சிதம்பரம் ஒருவழியாக ஜாமீனில் வெளியே வந்து சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கியிருக்கார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். சிறையில் இருந்து வெளியில் வந்ததுமே நாடாளுமன்றத்துக்குப் போன முன்னாள் நிதியமைச்சரான அவர், வெங்காய விலை பற்றிப் பேசிய இந்நாள் நிதியமைச்சர் நிர்மலாவுக்கு பதிலும் கொடுத்திருக்கிறார். மேலும் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிக்கிய ப.சி.யை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை மூலமாக முடிந்தளவு ஜெயிலிலேயே வைக்க நினைத்தது பா.ஜ.க. அரசு. அப்படியிருந்தும் நீதிபதி பானுமதி அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு ஜாமீன் கொடுத்ததையடுத்து, 4-ந் தேதி ப.சி. விடுவிக்கப்பட்டுள்ளார். திகாரிலிருந்து வெளியே வந்த அவர், தோல் சுருங்கிய நிலையில் மிகவும் இளைத்துக் காணப்பட்டார். விடுதலையானதும் சோனியாவை சந்தித்தார். நெகிழ்வோடு வரவேற்ற சோனியா, முதல்ல, ஹெல்த் செக்கப் செய்யுங்கள் என்று அக்கறையாக கூறியுள்ளார். நாடாளுமன்ற முகப்பில் வெங்காய விலைக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திலும் ப.சி. கலந்துகிட்டார்.''’
 

bjp



 

congress



இந்த நிலையில் போலி என்கவுண்டர் வழக்கில் அமித்ஷாவை 104 நாட்கள், காங்கிரஸ் ஆட்சியில் ப.சி. சிறையில் அடைத்து வைத்தார். அதை ஈடுகட்டும் விதமாக அமித்ஷா, ப.சிதம்பரத்தை 106 நாட்கள் உள்ளே வைத்துள்ளார் என்கின்றனர். மேலும் ப.சி. கைதான போது, அமித்ஷா சிறையில் இருந்த நாட்களுக்குக் குறையாமல் ப.சி. சிறையில் இருப்பார் என்று நம்ம நக்கீரன் ஏற்கனவே சொல்லியிருந்தது. இப்போது விடுதலையான ப.சி. கிட்ட சோனியா, பா.ஜ.க. அரசின் மக்கள் விரோதப் போக்கை நாடு முழுக்க டூர் போய் அம்பலப்படுத்துங்கள் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. ப.சி.யும் ரெடியாக, அவரை வேறு ஏதாவது வழக்கில் முடக்க முடியுமா என்று இப்போது இருந்தே திட்டம் போட்டு வருவதாக கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்