Published on 21/09/2019 | Edited on 21/09/2019
சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி, ப.சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து பொருளாதார குற்றவாளிகளுக்கான பகுதியில் உள்ள ஏழாம் எண் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் ப.சிதம்பரம் போல் அதிமுகவில் இருக்கும் ஒரு அமைச்சரை சிபிஐ குறிவைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது பற்றி நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்த போது, முதல்வருடன் வெளிநாட்டு விசிட்டில் முக்கிய துணையாக இருந்த அமைச்சர் விஜயபாஸ்கரை மத்திய அரசு குறிவைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அவர் தொடர்பான ஊழல் ஃபைல்களை ஏற்கனவே சி.பி.ஐ. பக்காவாகத் தொகுத்து வைத்துள்ளதாக கூறுகின்றனர். அவர் சம்பந்தப்பட்ட இடங்களில் நடத்திய ரெய்டு டீடெய்ல்களும் தெளிவாக இருப்பதாக கூறுகின்றனர். இந்த நிலையில் அண்மையில் சி.பி.ஐ. அதிகாரிகளை அழைத்துப் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சில ரகசிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து எந்த நேரத்திலும் டெல்லியில் உத்தரவு வரலாம் என்றும், இதில் சம்மந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகளை கைது செய்யப்படலாம் என்றும் கூறிவருகின்றனர்.