Skip to main content

“முயற்சிகள் அனைத்தும் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டது” - டி.ஆர். பாலு வேதனை 

Published on 26/02/2023 | Edited on 26/02/2023

 

“All efforts have been blacked out”  T.R.Balu pain

 

தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்வதற்காக திமுக மேற்கொண்ட முயற்சிகள் இருட்டடிப்பு செய்யப்பட்டதாக திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

 

சென்னையில் இருந்து மதுரை வரை செல்லும் தேஜஸ் ரயில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் துவக்கி வைக்கப்பட்டது. இது சென்னையில் இருந்து மதுரைக்கு 6 மணி நேரத்தில் சென்றுவிடும். 

 

சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் இந்த ரயில் திருச்சியில் மட்டுமே நின்று செல்லும். சென்னையில் இருந்து புறநகர் வழியே திருச்சியை நோக்கிச் செல்லும் தேஜஸ் ரயில் தாம்பரத்திலும் நின்று செல்ல வேண்டும் என சென்னைவாசிகள் தொடர்ச்சியாக அறிவுறுத்தி வந்தனர்.  திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, எம்.பி சு.வெங்கடேசன், மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டவர்கள் இது குறித்து ரயில்வே துறையிடம் கோரிக்கையை அளித்திருந்தனர். 

 

இந்நிலையில் அனைவரின் வேண்டுகோலையும் ஏற்ற ரயில்வே துறை இன்றில் இருந்து (26-02-23) தேஜஸ் ரயில் தாம்பரத்திலும் நின்று செல்லும் என அறிவித்தது. அதன்படி, தேஜஸ் ரயில் சென்னையில் இருந்து புறப்பட்டு தாம்பரத்தில் நின்று சென்றது. அதை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு ஆகியோர் கொடியசைத்து வழியனுப்பி வைத்தனர். 

 

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த டி.ஆர்.பாலு, “நான் எம்.பி.யாக ஜூன் 18 பதவி ஏற்றது . மே 30 ஆம் தேதி இது குறித்தான கடிதத்தை சேர்மனிடம் கொடுத்தேன். தேஜஸ் ரயிலை தாம்பரம் ரயில் நிலையத்தில் நிறுத்துவது தொடர்பாக திமுக எம்.பிக்களின் முயற்சி இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டது. இந்த நிகழ்ச்சி குறித்த நேரத்தில் ஆரம்பிக்கப்படவில்லை. நாங்கள் இருந்த இருக்கைகளுக்கு பின்னால் எங்கள் பெயர்கள் தெரியாத அளவிற்கு வடிவமைத்துள்ளனர். இந்த இருக்கைகள் மறைக்கும் அளவிற்கு எங்களது பெயர்களை எழுதி வைத்துள்ளார்கள்” எனக் கூறினார்.

 

முன்னதாக ரயில் புறப்படும் முன் கொடி அசைத்து அதை துவக்கி வைக்க, திமுக எம்.பி. பாலுவிடம் கொடி கொடுக்கப்பட்டது. ஆனால், தனது எதிர்ப்பினை பதிவு செய்யும் விதமாக அவர் அதை வாங்க மறுத்ததும் குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்