Skip to main content

“ஊழலை ஒழிப்பதே அதிமுகவின் நோக்கம்..” - எம்.பி. தம்பிதுரை 

Published on 04/11/2023 | Edited on 04/11/2023

 

"The aim of ADMK is to eliminate corruption." - MP Thambidurai
கோப்புப் படம்

 

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆய்வு செய்தல் மற்றும் ஆலோசனைக் கூட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி தலைமையில் நடைபெற்றது.

 

இதில் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், பூத் கமிட்டி  திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளருமான தம்பிதுரை கலந்துகொண்டு பூத் கமிட்டி ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார். அப்போது பேசிய தம்பிதுரை, “தேர்தல் நேரத்தில் மட்டும் நடிகர்கள் அரசியலுக்கு வருவதாக கூறுகின்றனர். எம்.ஜி.ஆர் வேறு மற்ற நடிகர்கள் வேறு. நடிகர்களை நம்பி அரசியலுக்கு வந்தவர்கள் இன்று காணாமல் போய் உள்ளனர் என பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 

திமுகவில் கலைஞர் தொடங்கி தற்போது ஸ்டாலின் வரை குடும்ப ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் குடும்ப ஆட்சி நடத்திய காங்கிரஸ் இன்று காணாமல் போய்விட்டது. திமுக என்ற கட்சியும் விரைவில் காணாமல் போகும். அதிமுகவின் நோக்கம் தமிழகத்தில் குடும்ப ஆட்சியையும், ஊழலையும் ஒழிப்பது மட்டுமே” என்றார்.

 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், ஜோலார்பேட்டை நகரச் செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி அதிமுக பொறுப்பாளர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூத் கமிட்டி முகவர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்