சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து அதிமுகவின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள், மா.செ.க்கள் உள்ளிட்டவர்களோடு ஆலோசனைக் கூட்டத்தை, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி ஆகியோர் நடத்தினர்.
இன்று மாலை 5 மணிக்கு கூடிய கூட்டத்தில், பல்வேறு பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆலோசனைக் கூட்டம் துவங்குவதற்கு முன்பு, 4.30 மணிக்கு தனது இல்லத்திலிருந்து புறப்பட்டார் முதல்வர் எடப்பாடி. புறப்படுவதற்கு முன்பாக, மாற்றுக் கட்சியிலிருந்து பலர் விலகி அதிமுகவில் இணைந்த நிகழ்ச்சியை தனது இல்லத்தில் முதல்வர் நடத்தினார். குறிப்பாக, திமுகவிலிருந்து 100 பேர் அதிமுகவில் இணைந்தனர். இந்த வைபவத்தை நடத்தி முடித்துவிட்டே, கட்சியின் ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்தார் முதல்வர். இதனைக் கேள்விப்பட்ட மூத்த தலைவர்கள், "கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறோம்.
திமுக கட்சியிலிருந்து அதிமுகவுக்கு வரும் தொண்டர்களை, கட்சியின் தலைமையகத்தில் வைத்து இணைத்திருக்கலாம். அதைத் தவிர்த்து, தனது இல்லத்தில் தனிப்பட்ட முறையில் அவர் (முதல்வர்) இணைத்திருப்பது ஆரோக்கியமானதாக இல்லை. கட்சித் தலைமையகத்தில், அந்த நிகழ்ச்சியை வைத்திருந்தால், ஓ.பி.எஸ் தலைமையில் இணைந்தது போல ஆகிவிடும் என்பதால், அப்படிச் செய்தி பதிவாகக் கூடாது என்கிற திட்டத்தில் தான், தனிப்பட்ட முறையில் அதனைத் தனது இல்லத்தில் முதல்வர் பழனிசாமி நடத்தியிருக்கிறார்" என்று ஒருவருக்கொருவர் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார்கள்.