![eps](http://image.nakkheeran.in/cdn/farfuture/Kf8TdCKGVLkOIRarn3JyhIKWauE3wlJP2M6WUcmzLv0/1568360083/sites/default/files/inline-images/eps-001_1.jpg)
தமிழக அமைச்சரவையில் பாலகிருஷ்ணா ரெட்டி, மணிகண்டன் ஆகியோர் விலயதால் இரண்டு காலியிடங்கள் இருக்கிறது. இந்த இடங்களோடு நான்கு அமைச்சர்களின் செயல்பாடுகள் சரியில்லாததால் புதிய அமைச்சர்களை நியமிக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்தார்.
அதற்காக தோப்பு வெங்கடாசலம், குமரகுரு, சதன் பிரபாகர், சண்முகநாதன் ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இதில் நீக்கப்படும் அமைச்சர்களில் ராஜலட்சுமி இடம்பெற்றார். இந்த விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் திடீரென நான்கு அமைச்சர்களை நீக்கும் முடிவை எடப்பாடி கைவிட்டார்.
அதற்கு காரணம், ஏற்கனவே மணிகண்டன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வேலை செய்து வருகிறார். இந்த நான்கு அமைச்சர்களை நீக்கினால் மொத்தம் ஐந்து பேர் ஆகி அவர்கள் திமுகவை ஆதரிக்கக்கூடும், அதனால் ஆட்சிக் கவிழும் என்கிற எச்சரிக்கை எடப்பாடி பழனிசாமிக்கு உளவுத்துறையால் அளிக்கப்பட்டது.
அதனால் தற்காலிகமாக அமைச்சர்களை நீக்கும் முடிவை தள்ளி வைத்துள்ளார். ஆனால் புதிதாக இரண்டு பேரை சேர்க்கும் ஆலோசனையில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
-மகேஷ்