முதல்வர் எடப்பாடிக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் இடையிலான உரசல் இன்னும் அதிகமாகி கொண்டிருக்கிறது என்று கோட்டை வட்டாரங்களில் கூறிவருகின்றனர். இது பற்றி விசாரித்த போது, முதல்வர் மேல் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினால் அவருக்காக சுகாதாரத்துறை அமைச்சர் பதில் கொடுக்கிறார் ஏன் என்று கேள்வி எழுப்பினால், அது எல்லாம் மீடியாவிற்காக என்று சொல்கின்றனர். அதாவது 27- ஆம் தேதி பிரதமர் மோடி, எடப்பாடி உள்ளிட்ட மாநில முதல்வர்களோடு, ஊரடங்கை நீடிப்பது குறித்து வீடியோ கான்பரன்ஸில் ஆலோசனை நடத்தினார். அது முடிந்ததும், சீனியர் அமைச்சர்கள் சிலரோடு, தமிழகத்தில் கரோனாவின் பாதிப்பு அதிகரிப்பது குறித்தும், அரசுமீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் எடப்பாடி கவலையோடு பேசியதாகச் சொல்லப்படுகிறது.
அப்போது, விஜயபாஸ்கரைப் பார்த்து எமோஷனலான எடப்பாடி, "உங்களால் நம்ம கவர்மெண்டுக்கே கரோனா வந்துவிடும் போலிருக்கிறது. நாம் மக்களுக்காக இவ்வளவு செய்தும், எல்லோரும் ரேபிட் கிட் விவகாரத்தையே பேசறாங்க"ன்னு சொல்ல, இதனால் டென்ஷனான விஜயபாஸ்கர், "அந்த விவகாரத்துக்கு நீங்கதான் காரணம். அதுமட்டுமா? இங்க நடக்கும் கொள்முதல் எல்லாத்திலும், எதிர்பார்ப்போடு தலையிட்டு, நீங்கதானே ஓ.கே. பண்றீங்க"ன்னு, அவர் முகத்துக்கு நேராவே வெடிச்சிட்டார். மேலும் சக அமைச்சர்கள் முன்பாகத் தனக்கு எதிராக விஜயபாஸ்கர் பேசியதால் முதல்வர் எடப்பாடி அப்செட் ஆகிவிட்டார் என்று கூறிவருகின்றனர்.