Skip to main content

எடப்பாடியின் சீட் கணக்கு!  ஏற்க மறுக்கும் பாமக! 

Published on 04/12/2020 | Edited on 04/12/2020
ddd


 

அதிமுக கூட்டணி கட்சிகளுக்கான சீட் எண்ணிக்கைக் குறித்து முதல்வர் எடப்பாடியும் துணை முதல்வர் பன்னீரும் சில முடிவுகளை எடுத்திருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, பாஜகவுக்கு 25, பாமகவுக்கு 20, தேமுதிகவுக்கு 15 என 60 இடங்களை ஒதுக்கி விட்டு, 174 இடங்களில் அதிமுக போட்டியிட எடப்பாடியும், பன்னீரும் முடிவெடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
                           

இந்த எண்ணிக்கையை சம்மந்தப்பட்ட கூட்டணி கட்சிகளின் தலைமையிடம் அதிமுக தெரிவித்திருக்கிறதாம். இந்த எண்ணிக்கையை ஏற்க மறுக்கும் பாமக தலைமை, அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு இரண்டாவது இடம் வேண்டும் என்றும், அதனடிப்படையில் பாமகவுக்கு 30 இடங்களை ஒதுக்க வேண்டும் என்றும் எடப்பாடியிடம் கோரிக்கை வைத்திருக்கிறதாம். 
                           

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து எடப்பாடியை சந்தித்து விவாதிக்க, தலைமைச் செயலகம் சென்ற அன்புமணி, பாமகவுக்கான இந்த ’இட’ஒதுக்கீடு பற்றியும் வலியுறுத்த திட்டமிட்டிருந்திருக்கிறார். ஆனால், அதனை விவாதிப்பதற்கு  எடப்பாடி இடம் தரவில்லை என்கிறார்கள் அதிமுகவினர்.

சார்ந்த செய்திகள்