தமிழக சட்டமன்றத் தேர்தலில் எப்படியும் வெற்றியைத் தக்க வைத்து விட வேண்டும் என்பதில் அதிமுக அமைச்சர்கள் பல முயற்சிகளை செய்து கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்து இந்த தேர்தலை சந்தித்து இருக்கின்றனர்.
தங்களை எதிர்த்துப் போட்டியிட்ட அமைச்சர்களை நிச்சயம் தோல்வி அடையச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் அவர்களுக்கு இணையாக இல்லை என்றாலும் தங்களுடைய சக்திக்குத் தகுந்தாற்போல் பணத்தை வாரி இறைத்து இந்த தேர்தலை சந்தித்திருக்கிறார்கள் திமுக வேட்பாளர்கள்.
இருப்பினும் நட்சத்திர வேட்பாளர்கள் அடையாளத்தில் முக்கியப் பங்கு வகிப்பவர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். தன்னுடைய சொந்தத் தொகுதியான விராலிமலையில் நடந்த 2021 ஆம் சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் பழனியப்பனை எதிர்த்துப் போட்டியிட்டிருக்கிறார். மீண்டும் தன்னுடைய தொகுதியைத் தக்க வைத்து விடவேண்டும் என்பதற்காக சுமார் 130 கோடி ரூபாய் பணத்தைக் கட்சியினருக்கும் தொண்டர்களுக்கும் வாக்காளர்களுக்கும் வாரி இறைத்து இருக்கிறார்.
ஆனால் திமுக வேட்பாளர் தன்னுடைய சக்திக்குத் தகுந்தாற்போல் சுமார் 29 கோடி ரூபாய் வரை இந்தத் தேர்தலில் செலவு செய்திருக்கிறார். எனவே இந்த வேட்பாளர் போட்டியில் 130 கோடி ரூபாய் வெற்றி பெறுமா அல்லது 29 கோடி ரூபாய் வெற்றி பெறுமா என்பதை வருகின்ற மே இரண்டாம் தேதி வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.